மூன்று எழுத்துக்களைக் கொண்ட “பாவம்” என்ற இந்தச் சிறிய சொல் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் சந்திக்கிறது? சதி செய்கிறது,மோசம் போக்குகிறது? பாதிக்கிறது “பாவி” என்ற சொல்லிற்கு அவனை ஆளாக்குகிறது. ஆகையால்? ஒவ்வொரு மனிதனையும் ஏன்? முழு மனுக்குலத்தையுமே “பாவிகள்” என்று பட்டம் சூட்டுகிற இச்சொல்லைக் குறித்து அறிவதும்,அது எப்படி? எப்போது? ஏன்? யாரால்? ஆரம்பமானது, அதனால் ஏற்படும் விளைவு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள, விடுபட என்ன வழி உண்டு? என்பதையெல்லாம் அறியவேண்டியது மிகவும் முக்கியம். இதைக் குறித்து அறிந்து கற்றுக்கொள்வதற்கு பரிசுத்த வேதாகமத்தையன்றி உலகில் வேறு எந்த புத்தகமோ, ஏடுகளோ இதுவரைக்கும் இல்லை, இனிமேலும் இருக்கப்போகிறதில்லை. எனவே பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, ஆராய்ந்து இது பற்றிக் கற்றுக்கொள்வோம்.
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவ வார்த்தைகள், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு தேவ மனு~ர்களால் எழுகப்பட்டவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆந்த வார்த்தைகள் ஜீவனுள்ளதும், வல்லமையானதும், எல்லாக் காலங்களிலும் முழு மனித சமுதயாத்திற்கும் அவர்களுடைய பரிபூரண வாழ்க்கைக்கும் பிரயோஜனமும், பயனள்ளதும், வேண்டியதுமாய் இருக்கிறது. இந்த மகா பெரும் உண்மையை சரிவர அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த வேதாகமத்தை தினந்தோறும்ப் படித்து வரும்போது அதிலுள்ள வார்த்தைகள் ஜீவனும் வல்லமையும் உள்ளவை என்ற உண்மையை உணர்ந்து கொள்வான்.
பரிசுத்தம் என்ற சொல்லிற்கு கர்த்தராகிய தேவாதி தேவனைத் தவிர வேறு ஒருவரையோ ஒரு படைப்பையோ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான எதையுமே அவருக்கு நிகராக ஒப்பிட்டுக் காட்ட முடியாது. பரிசுத்தத்திற்கு நிகர், பரிசுத்தராகிய பரம தேவன் மட்டும் தான். பரலோக இராட்சியத்தில் கோடான கோடி தேவ தூதர்கள் எல்லா வேளைகளிலும் அந்த பரிசுத்த தேவனை பரிசுத்தர்! பரிசுத்தர்!! பரிசுத்தர்!!! என்று துதித்துக்கொண்டே இருக்கின்றனர். அவருடைய பரிசுத்தத்திற்கு முன்னதாக எந்த ஒரு படைப்பும் நிற்கமுடியாது.